வண்ணமயமாக ஆரம்பித்த ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு.. முதல் ஒருமணிநேர கண்ணோட்டம்!
26 ஆடி 2024 வெள்ளி 18:44 | பார்வைகள் : 16777
சென் நதியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் இருந்து மூவர்ணத்தில் தண்ணீர் வெடித்துச் சிறதறிய கண்கொள்ளாக்காட்சியுடன் சரியாக 7.30 மணிக்கு ஆரம்பமானது ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வு!
பல இலட்சம் மக்கள் சென் நதிக்கரைகளில் கூடியிருக்க, அனைத்து நாட்டு வீரர்களும் படகுகளில் தங்களுக்கான சீருடைகளுடன், தங்கள் நாட்டுக் கொடியுடன் ஆர்ப்பரிக்க மக்களை பார்த்து கையசைத்துக்கொண்டு வருகை தந்தனர்.
பிரபல பாடகி Lady Gaga பார்வையாளர்களை வரவேற்று பாடல் பாடினார்.

louis vuitton நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளில் ஒலிம்பிக் பதக்கங்கள் எடுத்துவரப்பட்டு அவை காட்சிப்படுத்தப்பட்டது.
லூவர் அருங்காட்சியகத்தில் தங்க நிறத்தில் ஒளிரும் காதிதங்கள் ஒட்டப்பட்டு, அதன் முன்னர் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பாரம்பரிய நடனம் ஆடினார்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடகி Aya Nakamura பிரெஞ்சுப் பாடல் ஒன்றை பாடினார்.

இதற்கிடையில், முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் ஒலிம்பிக் தீபத்தை சுமந்துகொண்டு பரிசில் உள்ள கட்டிடங்களின் கூரை வழியாக தாவித்தாவி ஓடி ஒவ்வொரு இடங்களாக கடந்து சென்றார். அவரது முகம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
.jpg)
பரிசின் மேலே விமானங்கள் மூலம் சிவப்பு நிறத்தில் இராட்சத அளவில் ‘இதயம்’ ஒன்றின் உருவம் உருவாக்கப்பட்டது.

மேலும் பல நாடுகளில் இருந்து வீரர்கள் வருகை தந்துகொண்டுள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan