இலங்கையில் கடவுச்சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

26 ஆடி 2024 வெள்ளி 16:15 | பார்வைகள் : 10358
முன்பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் முன்பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறும் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
01.01.2025 முதல் அரசாங்கம் இலங்கையர்களுக்கு பாதுகாப்பான புதிய e passport ஐ வழங்க தீர்மானித்துள்ளது.
மேலும் ஜூலை 16 முதல், கடவுச்சீட்டை பெற விண்ணப்பிக்க https://www.immigration.gov.lk/ என்ற இணைப்பின் மூலம் முன்பதிவு செய்யலாம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1