ஒலிம்பிக் போட்டிகளுக்காக பரிசில் புதிய FM வானொலி..!

24 ஆடி 2024 புதன் 15:05 | பார்வைகள் : 9520
பரிசில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக விசேட FM வானொலி ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
107.9 எனும் அலைவரிசையூடாக வானொலி ஒன்று ஒலிபரப்பாகி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் வரை இந்த வானொலி இயங்கும் எனவும், மேலும் சில நாட்கள் கூட அவை இயக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலைவரிசையில் இதற்கு முன்னர் எந்த ஒரு சேவையும் இயக்கப்படவில்லை. தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்த அலைவரிசை ஊடகங்களுக்கான தகவல் பரிமாற்றமாகவும், அதனை சீர்ப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள Paname 24 நிறுவனம் இந்த வானொலி அலைவரிசையை பயன்படுத்தி வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1