ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் - இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்து மீட்க்கப்பட்ட குழந்தை

22 ஆடி 2024 திங்கள் 15:38 | பார்வைகள் : 10614
இஸ்ரேலிய தாக்குதலில் இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்து ஆண் குழந்தை உயிருடன் காப்பாற்றப்பட்டதாக காசா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போரில் இதுவரை 38,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் Ola Adnan Harb AI-Kurd என்ற 9 மாத கர்ப்பிணி பெண் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து அவர் உடனடியாக AI-Awda மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அங்கு அவர் உயிரிழந்தார்.
எனினும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத் துடிப்பை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையை உயிருடன் வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து மருத்துவ துரையின் தலைவர் Raed AI-Saudi கூறுகையில், ''புதிதாக பிறந்த குழந்தை ஆரம்பத்தில் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ கவனிப்பைப் பெற்ற பிறகு நிலைப்படுத்தப்பட்டது'' என்றார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1