இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆண் குழந்தை

1 புரட்டாசி 2023 வெள்ளி 11:10 | பார்வைகள் : 7894
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுப்ரதா பட்டாச்சார்யாவின் மகள் சோனம்-ஐ, தற்போதைய கேப்டன் சுனில் சேத்ரி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு நடந்தது.
இந்த நிலையில் காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை சோனத்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுனில் சேத்ரி தனது குழந்தை பிறப்பிற்காக விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்திருந்தார்.
இதனால் அவர் தாய்லாந்தில் நடைபெற உள்ள கிங்ஸ் கோப்பை தொடரை தவறவிடுவார்.
சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு தொடரில் தனது அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1