பாடசாலையில் துன்புறுத்தல்... மாணவி தற்கொலை..!!
.jpg)
20 ஆடி 2024 சனி 16:06 | பார்வைகள் : 11651
13 வயதுடைய மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பாடசாலையில் இடம்பெற்ற துன்புறுத்தல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை இச்சம்பவம் மார்செய் (Marseille) நகரில் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Busserine பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோர்களுடன் வசிக்கும் 13 வயதுடைய குறித்த சிறுமி, மாலை 6 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி அங்குள்ள பாடசாலை ஒன்றில் பயில்வதாகவும், கடந்த பல மாதங்களாக அவர் உடல் மற்றும் உள ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், அதன் முடிவில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாடசாலையில் இடம்பெற்ற துன்புறுத்தல் தொடர்பில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1