இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முன்பதிவு அவசியம்

19 ஆடி 2024 வெள்ளி 06:37 | பார்வைகள் : 12970
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது.
அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இன்று வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும் கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1