புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மூன்றுபேர்: நான்காவதாக தெரிந்த உருவம் ஏற்படுத்திய திகில்
18 ஆடி 2024 வியாழன் 16:04 | பார்வைகள் : 4429
நண்பர்கள் சிலர் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுக்க, புகைப்படம் கையில் வந்தபோது, தங்களுடன் நான்காவதாக ஒரு உருவம் நிற்பதைக் கண்டு திகிலில் உறைந்தனர்.
இங்கிலாந்தில் வாழும் Chloe-Anne Edwards என்னும் பெண், தன் நண்பர்களுடன் Bath என்னும் இடத்துக்குச் சென்றிருந்தபோது, போலராய்டு கமெராவில் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்கள் மூவரும்.
போலராய்டு கமெராவில் உடனடியாக புகைப்படம் கைக்குக் கிடைத்துவிடும் என்பதால், புகைப்படத்தை மூவரும் ஆர்வமுடன் பார்வையிட, தனது பக்கத்தில் நான்காவதாக ஒரு உருவம் நிற்பதைக் கண்டு பயந்துபோயிருக்கிறார் Chloe.
அந்த புகைப்படத்தை அவர் பேஸ்புக்கில் வெளியிட்டு நடந்ததை விவரிக்க, அந்த புகைப்படத்தைப் பார்த்தவர்களும் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சிலர் அது ஒரு ஆவிதான் என்று கூற, ஒரு பெண், தனது கணவரும் அதே இடத்துக்கு சுற்றுலா சென்றிருந்ததாகவும், அவரும் அந்த இடத்தில் ஏதோ அமானுஷ்யத்தை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களோ, ஆவியாவது ஒன்றாவது, அங்கே பக்கத்தில் சிலை ஏதாவது இருந்ததா என்று பாருங்கள் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan