அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பிரசார கூட்டம் ரத்து

18 ஆடி 2024 வியாழன் 08:04 | பார்வைகள் : 5507
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக இன்று (18.07.2024) நடைபெறவிருந்த அரசியல் பிரசாரக் கூட்டத்தையும் அவர் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜோ பைடனுக்கு இரண்டு முறை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் குணமடைந்துள்ளார்.
தற்போது 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1