தீக்கிரையான காருக்குள் சடலமாக மீட்க்கப்பட்ட பிரித்தானியர்கள் - ஸ்வீடனின் கோர சம்பவம்
17 ஆடி 2024 புதன் 08:31 | பார்வைகள் : 5784
ஸ்வீடனின் மால்மோ நகரில் தீக்கிரையான காருக்குள் இரு பிரித்தானியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது இரட்டைக் கொலை வழக்காகவே பொலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், ஒரு மண் சாலையில் தீக்கிரையான நிலையில் காணப்பட்ட கார் ஒன்றில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், கார் தீக்கிரையாகும் முன்னரே இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்னர் Fosie தொழிற்பேட்டையில் கைவிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரும் டென்மார்க்கில் கோபன்ஹேகன் காஸ்ட்ரப் விமான நிலையத்தில் இருந்து காரை வாடகைக்கு எடுத்ததாக நம்பப்படுகிறது.
ஸ்வீடன் பொலிசார் தெரிவிக்கையில், அவர்கள் யார் என்பது தொடர்பில் தங்களுக்கு தெரியும் என்றும், ஆனால் இருவரையும் அடையாளம் காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஞாயிறன்று மீட்கப்பட்ட உடல்கள் தற்போது தடயவியல் ஆய்வாளர்கள் வசமிருப்பதாக கூறப்படுகிறது. ஞாயிறன்று பகல் 11.30 முதல் 2 மணி வரை கருப்பு நிற Toyota Rav4 கார் ஒன்று பயணிப்பதை கவனித்தவர்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தேடும் பணியில் இன்டர்போல் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சுற்றுலாப் பயணிகள் மால்மோ பகுதியில் எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானியாவின் வெளிநாட்டு பயண ஆலோசனை வழங்கும் அமைப்பானது எச்சரித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan