பத்தகலோன் அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் தீபம்.. கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி..!
14 ஆடி 2024 ஞாயிறு 16:08 | பார்வைகள் : 16656
நவம்பர் 13 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒலிம்பிக் தீபம் சற்று முன்னர் பத்தகலோன் (Bataclan) அரங்கிற்கு கொண்டுவரப்பட்டது.
ஒலிம்பிக் தீபம் பரிசுக்கு கொண்டுவரப்பட்டு இன்று நண்பகல் முதல் பரிஸ் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே பத்தகலோன் அரங்கிற்கு கொண்டுவரப்பட்டது. பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 130 பேரின் நினைவாக, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அங்கு தீபம் சில நிமிடங்கள் தரித்து வைக்கப்பட்டிருந்தது.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு கூடியிருந்தார்கள். நவம்பர் 13 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பின் தலைவர் Arthur Dénouveaux என்பவர் பொதுமக்களின் சார்பாக ஒலிம்பிக் தீபத்தினை சில நிமிடங்கள் சுமந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பத்தக்கலோன் அரங்கு உட்பட ஆறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*நவம்பர் 13 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கு அனைப்பின் பெயர் "13Onze15 Fraternité et vérité" ஆகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan