Paristamil Navigation Paristamil advert login

வினோத நோயால் அவதியுறும் கனேடிய பெண்...

வினோத நோயால் அவதியுறும் கனேடிய பெண்...

9 ஆனி 2024 ஞாயிறு 09:50 | பார்வைகள் : 11579


கனடாவை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு ப்ரூவரி சிண்ட்ரோம் நோய் இருப்பதை டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குடல் பூஞ்சை நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு அரிய வகை நோய் ஆகும். 

இது அவரது குடலில் ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது. குடிபோதையில் இல்லை.

இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான பகல்நேர தூக்கம் மற்றும் மந்தமான பேச்சு ஆகியவற்றால் அவதிப்பட்டார்.

மேலும் மது அருந்தாமல் இருந்தபோதிலும், இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மற்றும் அவரது சுவாசத்தில் ஆல்கஹால் அதிகரித்தது.

அந்த பெண் குடிக்கவில்லை என்று கூறினாலும் டாக்டர்கள் அதை நம்ப மறுத்தனர்.

இதை தொடர்ந்து அவருக்கு கடந்த 5 ஆண்டுகளில், அவருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) இருந்தன.

இதற்கு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் நைட்ரோஃபுரான்டோயின், அத்துடன் இரைப்பை குடல் ரிஃப்ளக்ஸ் நோய், டெக்ஸ்லான்சோபிரசோல் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.

முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பாள் இருப்பினும், சமீப ஆண்டுகளில், மத நம்பிக்கையின் காரணமாக அவர் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

அவர் இதுவரை ஏழு முறை அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றிருக்கிறார். 

இது மருத்துவர்களிடையே நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாததை காரணம் என கூறுகின்றனர்.

தற்போது அந்த பெண் பூஞ்சை காளான் மருந்துகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.

"நீரிழிவு நோய், கல்லீரல் நோய், குடல் டிஸ்மோட்டிலிட்டி கோளாறுகள் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற நோய்கள் ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோமுடன் தொடர்புடையவை" என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்