கனடாவில் கோலாகலமாக ஆரம்பமாகும் தமிழர் தெருவிழா ...
25 ஆவணி 2023 வெள்ளி 10:04 | பார்வைகள் : 10688
கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர் தெருவிழா எனும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டும் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இந்த நிகழ்வு கோலாகலகமாக நடைபெற உள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டொரன்டோ மார்க்கம் வீதியில் இம்முறை இந்த தமிழர் தெருவிழா நடைபெற உள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாச்சார, கலை அம்சங்களை எடுத்தியம்பும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
இசை, தமிழ் பாரம்பரிய உணவு வகைகள் தமிழர் மரபுகள் என்பனவற்றை பறைசாற்றக்கூடிய வகையில் இந்த தமிழர் திருவிழா கனடாவில் நடைபெற உள்ளது.
இம்முறை நிகழ்வில் பிரபல தென்னிந்திய பாடகர் விஜய் பிரகாஷ், ஜீ தமிழ் சரி க ம ப புகழ் மாதுளாணி பெனார்டோ, பறை இசைக் கலைஞர் மணிமாறன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகப்பெரிய பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் மற்றும் சர்வதேச தமிழ் பிரபலங்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கல்வியலாளர்கள் வரலாற்றியாலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த தமிழர் தெருவிழா கனடிய வாழ் தமிழ் சமூகத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan