உடலில் குண்டூசிகளுடன் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பெண்

17 ஆடி 2023 திங்கள் 14:53 | பார்வைகள் : 9336
லிந்துலை - கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி 30 வயது பெண், கடந்த மாதம் சவுதி நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இவருக்கு அரேபிய மொழி பேசுவதில் சிக்கல் காணப்பட்டதனால், அவரை வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப் படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அந்த பெண் மீளவும் நாடு திரும்ப தீர்மானித்துள்ளார்.
நாடு திரும்பிய பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவரது உடலில் குண்டூசிகள் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
தற்போது இரண்டு ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் அதிகமான ஊசிகள் உடம்பில் இருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1