Kylian Mbappé இன் பேச்சினால் கோபமடைந்துள்ள PSG கழகம்..!

5 ஆனி 2024 புதன் 07:45 | பார்வைகள் : 10903
PSG கழகத்தில் இருந்து Kylian Mbappé வெளியேறி Real Madrid அணியில் ஒப்பந்தமாகியிருப்பது அறிந்ததே. திங்கட்கிழமை அதனை உத்தியோகபூர்வமாக Real Madrid அணி அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை Mbappé ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போது பலதரப்பட்ட கேள்விகளுக்கு மிக நீண்ட பதில்களை அளித்திருந்தார். இதில் மிக சொற்பமாகவே PSG கழகத்தை பாராட்டியிருந்தார். குறிப்பாக PSG கழகத்தின் நிர்வாகி Nasser Al-Khelaïfi 'தன்னை மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை!' என தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை PSG கழக நிர்வாகிகளை கோபப்படுத்தியும் உள்ளது.
பிரான்சின் "Liberté, Egalité, Fraternité” எனும் வார்த்தைகளை, மாற்றி 'விடுதலை, நான் களைத்துவிட்டேன்' என அர்த்தப்படுவதாக Libéré", "soulagé" எனவும் தெரிவித்திருந்தார். இந்த வசனம் மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.
PSG கழகம் சார்பில் இது தொடர்பாக பதிலளிக்கவில்லை என்றபோதும், சில உள்ளக தகவல்களின் படி கழகம் மிகவும் கோபமாக இருப்பதாகவும், 'முற்றிலும் நிதானமற்ற பேச்சு' என அதனை வர்ணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1