Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

4 ஆனி 2024 செவ்வாய் 06:18 | பார்வைகள் : 11215


இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 
 
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி அதன் புதிய விலை 3,790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,522 ரூபாவாகும். 
 
2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 712 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்