Paristamil Navigation Paristamil advert login

A4 நெடுஞ்சாலையில் விழுந்து நொருங்கிய விமானம்.. மூவர் பலி..!!

A4 நெடுஞ்சாலையில் விழுந்து நொருங்கிய விமானம்.. மூவர் பலி..!!

30 ஆனி 2024 ஞாயிறு 16:46 | பார்வைகள் : 10389


A4 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் விமானம் ஒன்று விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமானத்தில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்.

Collegien (Seine-et-Marnes) நகரில் இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இடம்பெற்றதாகவும், விபத்தை அடுத்து இரு புறங்களிலும் வீதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமானம் நடு வீதியில் விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர். அதிஷ்ட்டவசமாக வேறு வாகனங்கள் விபத்தில் சிக்கவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்