Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெரும் தடையாக மாறப்போகும் தொழிலாளர் வேலை நிறுத்தம்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெரும் தடையாக மாறப்போகும் தொழிலாளர் வேலை நிறுத்தம்.

26 ஆனி 2024 புதன் 19:26 | பார்வைகள் : 14262


எதிர்வரும் ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11 வரை நடைபெற உள்ள 'JO24'  ஒலிம்பிக் போட்டிகளுக்கு  முன்னதாக, ஜூலை தொடக்கத்தில் இருந்தே  வேலைநிறுத்தத்திற்கு  அழைப்பு விடுக்கப் போவதாக பாரிஸில் 'Groupe ADP' இன்று அறிவித்துள்ளது.

வரும் ஒலிம்பிக் போட்டிகளின் போது Roissy-Charles-de-Gaulle மற்றும் Orly விமான நிலையங்கள் வழியாக, நாள் ஒன்றுக்கு சுமார் 350,000 பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் Paris விமான நிலைய ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஊழியர் பற்றாக்குறை, கடுமையான அந்த காலகட்டத்தில் வேலை செய்யக்கூடியவர்களுக்கான போனஸ் கொடுப்பனவு குறித்து பல தடவைகள் தொழில் சங்கங்களான CGT, CFDT, FO மற்றும் Unsa பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எந்த முடிவுகளும் எட்டாத நிலையிலேயே இந்த வேலை நிறுத்தத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்