சல்மான்கான் மற்றும் ரஜினி ஒரே படத்தில் இணைவார்களா?
24 ஆனி 2024 திங்கள் 11:58 | பார்வைகள் : 5819
அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிக்க இருப்பதாகவும் இதனால் இந்த படம் ரூ.2000 கோடி வசூல் உறுதி என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் ஒரு சில காரணங்களால் அல்லு அர்ஜுன் நடிக்காத நிலையில் அடுத்ததாக அட்லியின் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகவும், ஏஆர் முருகதாஸ் படத்தை முடித்தவுடன் அட்லி படத்தில் அவர் இணைந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.
மேலும் இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் பெரிய ஹீரோக்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இந்த படம் உலகம் முழுவதும் 2000 கோடி வசூல் செய்யும் ஒரு மாபெரும் ஹிட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் தரமான சம்பவம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan