அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம்

23 ஆனி 2024 ஞாயிறு 09:43 | பார்வைகள் : 9927
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள வணிகவளாகத்தில் ஆயுதத்துடன் நபர் ஒருவர் காணப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
தென்அவுஸ்திரேலிய காவல்துறையினர் சம்பவம் ஒன்று உறுதிசெய்துள்ளதுடன் காவல்துறையினர் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் வணிகவளாகத்திற்குள் ஓடுவதை காணமுடிவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வணிகவளாகத்திலிருந்து வெளியேறுமாறு அவசர வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன.
அவசர நிலை என யாரோ தெரிவிப்பதையும் காவல்துறையினர் உள்ளே ஒடுவதையும் பார்த்தோம் என சிலர் டுவிட்டரில் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
இருவருக்கு உதவிமருத்துவ பணியாளர்கள் சிகிச்சை வழங்கிவருகின்றனர் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெல்ஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தை சுற்றி தற்காலிக வேலிகளை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
ஆயுதமேந்திய குற்றவாளி தப்புங்கள் மறைந்துகொள்ளுங்கள் ஏனையவர்களிற்கு தெரிவியுங்கள் என்ற செய்தியை வெல்ஸ்பீட் வணிகவளாகத்தின் அறிவிப்பு பலகையில் காணமுடிகின்றது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1