Paristamil Navigation Paristamil advert login

Saint-Ouen : 30 கிலோ கஞ்சாவுடன்.. மூவர் கைது!!

Saint-Ouen : 30 கிலோ கஞ்சாவுடன்.. மூவர் கைது!!

20 ஆனி 2024 வியாழன் 14:46 | பார்வைகள் : 13436


Saint-Ouen நகர காவல்துறையினர் நேற்று புதன்கிழமை மாலை  மேற்கொண்ட நடவடிக்கையில், 30 கிலோ எடையுள்ள போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். 

மாலை 4.40 மணி அளவில் இருவர் rue Pablo-Picasso வீதியில் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்வதை சிவில் உடையில் நின்றிருந்த காவல்துறையினர் பார்வையிட்டனர். பின்னர் அவர்களை கைது செய்தபோது, அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, கைது செய்யப்பட்ட நபரின் வீடு சோதனையிடப்பட்டது. அதன்போது அங்கிருந்து 30 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்தோடு அங்கிருந்த மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. அத்துப்பாக்கி அண்மையில் காவல்துறை வீரர் ஒருவரிடம் இருந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்