ஜாம்பவான் ரொனால்டோவின் இமாலய சாதனை முறியடிப்பு! வரலாறு படைத்த 19 வயது வீரர்
19 ஆனி 2024 புதன் 07:54 | பார்வைகள் : 7835
யூரோ 2024 தொடரில் துருக்கியே வீரர் அர்டா குலர் அடித்த கோல் மூலம் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.
நடப்பு யூரோ 2024 கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் துருக்கியே மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் துருக்கியே அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியா அணியை வீழ்த்தியது. துருக்கியே தரப்பில் மெர்ட் முல்டுர் (25), அர்டா குலர் (65) மற்றும் முகமது கெரெம் (90+7) கோல் அடித்தனர்.
இதில் அர்டா குலர் (Arda Guler) அடித்த கோல் மூலம், இளம் வயதில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ கிண்ணம்) தொடரில் கோல் அடித்த வீரர் எனும் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 19 வயது 128 நாட்களில் கோல் அடித்த நிலையில், அர்டா குலர் 19 வயது 114 நாட்களில் கோல் அடித்துள்ளார்.
அர்டா குலர் 2019ஆம் ஆண்டில் Turkish Cupin 2023 தொடரை Fenerbahce அணி வெல்ல உதவியதுடன், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
மேலும், ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய குலர் 10 போட்டிகளில் 6 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan