பரிஸ் : மகிழுந்து மூலம் கடையினை உடைத்த கொள்ளையன்...
17 ஆனி 2024 திங்கள் 19:43 | பார்வைகள் : 13969
கொள்ளையன் ஒருவன் பரிசில் உள்ள கடை ஒன்றை மகிழுந்து மூலம் உடைத்து, கொள்ளையிட முயற்சித்துள்ளார். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையினால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.
ஜூன் 17, இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Avenue Victor-Hugo வீதியில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள விலையுயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றினை அதிகாலை 4.30 மணி அளவில் நபர் ஒருவர் மகிழுந்து மூலம் இடித்து தள்ளியுள்ளார்.
ஆனால், வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையில் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. கொள்ளையன் மகிழுந்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
****
முன்னதாக, கடந்த வாரத்தில் Avenue Montaigne வீதியில் உள்ள chanel காட்சியறையில் ஒரு மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் இதே பாணியில் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan