கனடாவில் கல்கரி நகரில் அவசரகால நிலை பிரகடனம்

16 ஆனி 2024 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 6338
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரி நகரில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நகர மேயர் ஜியொடி கொன்டக்ட் இந்த அவசரகால நிலைமையை பிரகடனம் செய்துள்ளார்.
நகரில் நிலவிவரும் நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் நகரை நீர் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர்விநியோகம் பாதிக்கப்பட்டது.
நிலக்கீழ் நீர் விநியோக கட்டமைப்பின் ஓர் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீர் கசிவினை அடையாளம் கண்டு பழுது பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நகர மக்களுக்கு போதிய அளவு நீரை விநியோகம் செய்வதில் நகர நிர்வாகம் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
இந்த நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
நீர்த்தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு அல்பர்ட்டா மாகாண அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி பாராட்டுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நிலவிவரும் நீர் தட்டுப்பாடு காரணமாக நகர மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நகர நிர்வாகத்தின் அவசரகால நிலைமை தொடர்பில் நகர மக்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சிலர் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளதுடன் பல்வேறு தரப்பினர் இந்த அவசரகால நிலைமை அறிவிப்பினை விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1