இன்டர்போலை நாடும் பிரான்சின் குற்றத்தடுப்புப் பிரிவு!!
16 ஆனி 2024 ஞாயிறு 09:40 | பார்வைகள் : 10914
நெடுஞ்சாலையில் மிகவும் கொடூரமான சம்பவம் நடந்து ஒரு மாதமும் சில நாட்களும் ஆகியுள்ளது.
கடந்த 14 மே, ஒரு கைதியினை இடம் மாற்றும் பொழுது Eure இலுள்ள Incarville நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடியில் வைத்து, பெரும் கனரக ஆயுதத் தாக்குதல் நடாத்தி, இரு சிறையதிகரிகளையும் கொன்றுவிட்டு, கைதியைக் காப்பாற்றிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக தப்பிய கைதியையும் தாக்குதல் நடாத்தியவர்களையும் தேடி பெரும் படையணி களமிறக்கப்பட்டும் யாரும் சிக்கவில்லை.
.jpg)
இவர்கள் அனவரும் நாட்டை விட்டுத் தப்பி வேறு நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்ற நிலையில், JUNALCO எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய சட்ட நிர்வாகம் (juridiction nationale de lutte contre la criminalité organisée) சர்வதேச காவற்துறை மையமான இன்டர்போலினை நாடி உள்ளது.

இதில் தப்பிய மோசமான குற்றவாளியான மொஹமட் அம்ரா மீது சிவப்பு தேடுதல் அறிக்கையினை இன்டரபோலில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாடுகளில் இவர் சிக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

சிவப்பு அறிக்கையானது மிகவும் மோசமான குற்றவாளிகளைத் தேடுவதற்காக வழங்கப்படும் அறிக்கையாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan