Paristamil Navigation Paristamil advert login

காவல்துறை மாணவர்களுக்கு கடமையில் இல்லாதபோதும் ஆயுதம்..!

காவல்துறை மாணவர்களுக்கு கடமையில் இல்லாதபோதும் ஆயுதம்..!

15 ஆனி 2024 சனி 14:06 | பார்வைகள் : 8239


பயிற்சியில் ஈடுபடும் காவல்துறையினரும் இனிமேல் ஆயுதங்களை வைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும், கடமையில் ஈடுபடும் காவல்துறையினர் தங்களது கடமைய்ன் போதும், கடமை இல்லாத போதும் ஆயுதங்களை வைத்துக்கொள்ளலாம் எனும் சட்டம் இருந்தது. இந்த ஆயுதங்கள் காவல்துறை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

ஆனால் இனிமேல் காவல்துறை மாணவர்கள் பாடசாலைக்கு வெளியேயும் ஆயுதங்களை கொண்டுசெல்ல முடியும். இந்த சட்டம் ஜூன் 15, இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பயிற்சியாளர் (stagiaire) ஆக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் ஆயுதங்களை எப்போதும் வைத்திருக்க முடியும்!' என குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்