பதவி விலகுவாரா ஜனாதிபதி மக்ரோன்..!
12 ஆனி 2024 புதன் 16:43 | பார்வைகள் : 13306
வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதி பிரான்சில் பொதுத்தேர்தல் இடம்பெற உள்ளமை அறிந்ததே. இந்த தேர்தலில் மக்ரோனின் அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறாவிட்டால், அவர் பதவி விலகுவாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.
சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி மக்ரோனே, பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பினையும் வெளியிட்டார். ஐந்தாம் குடியரசில் இதுபோன்ற சம்பவம் பிரான்சில் இடம்பெற்றதில்லை. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரி Rassemblement national கட்சி அதிகூடிய ஆசனங்களை பெற்றிருந்தது. அதையடுத்தே ஜனாதிபதி மக்ரோன் பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மக்ரோன், அதில் தவறினால் பதவி விலகுவாரா எனும் கேள்விக்கு இன்றைய தினம் பதிலளித்திருந்தார்.
'இல்லை' என்பதே அந்த பதிலாகும்.
"2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ஐந்தாண்டுகால ஆட்சிக்கானதாகும். அதன்போது இரண்டு கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றது. இரண்டிலேயும் நான் அதிகமாக வாக்குகளைப் பெற்றேன். ஐந்தாண்டுகால ஆட்சிக்கான வாக்காகவே அதைக் கருதுகிறேன்!" என மிக தீர்க்கமாக மக்ரோன் பதிலளித்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan