கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்ட LSG உரிமையாளர்

9 வைகாசி 2024 வியாழன் 08:23 | பார்வைகள் : 3965
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் கேப்டன் கே.எல் ராகுலிடம் LSG அணியின் உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் SRH மற்றும் LSG அணிகள் மோதின.
முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
166 ஒட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 9.4 ஓவரில் 167 ஓட்டங்கள் எடுத்தது இமாலய வெற்றி பெற்றது.
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு, மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினர்.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு, மைதானத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா படுதோல்வி குறித்து LSG கேப்டன் கே.எல். ராகுலிடம் கடுமையாக உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
டிரெஸ்ஸிங் அறையில் நடைபெற வேண்டிய இந்த விவாதங்கள் பொதுவெளியில் நடந்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1