’அரண்மனை 4’முதல் வெற்றிப்படமா? '
7 வைகாசி 2024 செவ்வாய் 10:49 | பார்வைகள் : 8404
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் மூன்றே நாட்களில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாகவும் 2024ஆம் ஆண்டின் முதல் வெற்றி படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா உள்பட பலர் நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்ததை எடுத்து இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.
கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பார்த்து மகிழ ஒரு சரியான படம் என்று பெரும்பாலான விமர்சகர்கள் ,ஊடகங்கள் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் ’அரண்மனை 4’ திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 34 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் 24 கோடியும் தமிழகம் தவிர மற்ற இடங்களில் 10 கோடியும் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை தயாரிப்பாளர் குஷ்புவும் உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து 2024 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ’அரண்மனை 4’ படம் மட்டுமே இவ்வளவு பெரிய வசூலை வார இறுதியில் குவித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan