Dugny : பெண்ணைக் கடித்துக்குதறிய வளர்ப்பு நாய்!

3 வைகாசி 2024 வெள்ளி 13:18 | பார்வைகள் : 10219
Dugny (Seine-Saint-Denisல் நகரில் பெண் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக்குதறியுள்ளது. 43 வயதுடைய அப்பெண், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் குறித்த 43 வயதுப் பெண் l'allée Roger-Salengro பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் இரு நாய்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அவருடன் கணவரும் உடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், இரு நாய்களில் ஒன்று தீடீரென அப்பெண் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது. முகத்தில், கால்களில், கைகளில் என பல இடங்களில் காயமேற்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டு, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அப்பெண் காப்பாற்றப்பட்டார்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் உயிருக்காபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1