Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பு!

28 வைகாசி 2024 செவ்வாய் 16:55 | பார்வைகள் : 4555


மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதமாக பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்