Paristamil Navigation Paristamil advert login

பப்புவா நியூ கினி நிலச்சரிவில்  2000 பேர் பலி - ஐ. நா தகவல்

பப்புவா நியூ கினி நிலச்சரிவில்  2000 பேர் பலி - ஐ. நா தகவல்

28 வைகாசி 2024 செவ்வாய் 09:21 | பார்வைகள் : 9478


பப்புவா நியூ கினி நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2000 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முங்காலா மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்ததால், யம்பாலி என்ற மலை கிராமம் மண்ணில் புதைந்து ஏராளமானோர் தூக்கத்திலேயே இறக்க நேர்ந்தது.

அப்பகுதி ஸ்திரத்தன்மை இல்லாமல் காணப்படுவதால் கனரக ஏந்திரங்கள் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சடலங்களை சேதமடையாமல் அடக்கம் செய்ய வேண்டும் என பழங்குடி மக்களிடையே ஐதீகம் உள்ளதால் கனரக எந்திரங்களை பயன்படுத்த அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்