Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்கம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்கம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

28 வைகாசி 2024 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 6945


கனடாவின் மொன்றியாலில் இடி மின்னல் தாக்கம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாக பகுதியில் கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படக் கூடும் என எ தீர்வுகூறப்பட்டுள்ளது.

இடி மின்னல் தாக்கத்துடன் பலத்த காற்று வீசக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக கட்டடங்கள் சேதமடையக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான மழை பொழிவு சில இடங்களில் வெள்ளம் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என குறிப்பிடப்படுகின்றது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்