இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

27 வைகாசி 2024 திங்கள் 17:21 | பார்வைகள் : 12390
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 37 சதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 82 சதமாகக் காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 99 சதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 48 சதமாகக் காணப்பட்டது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1