வரலட்சுமி திருமணத்தின் பிரமாண்ட ஏற்பாடு..!
27 வைகாசி 2024 திங்கள் 14:47 | பார்வைகள் : 5891
நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலா சச்தேவ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது திருமண தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த திருமணம் வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் சென்னையில் மெஹந்தி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக நிக்கோலா சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த திருமணம் நிச்சயதார்த்த விழாவில் சரத்குமாரின் குடும்பம் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
இந்த நிலையில் நிக்கோலா சச்தேவ்-வரலட்சுமி திருமணம் ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் திருமணம் தாய்லாந்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட் திரை உலகின் நட்சத்திரங்களின் ஸ்டைலில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தாய்லாந்தில் திருமணம் குறித்த ஏற்பாடுகளை நிக்கோலா சச்தேவ் உறவினர்கள் செய்து வருவதாகவும் திருமணத்திற்கு வருபவர்களுக்கு பயண ஏற்பாடுகள் இப்போதே திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் திருமணத்திற்கு முந்தைய நாள் மெஹந்தி நிகழ்ச்சி சென்னை தாஜ் ஹோட்டலில், திருமணத்திற்கு பிந்தைய வரவேற்பு நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan