வீதி விபத்தில் 30 வயது இராணுவ வீரர் பலி..!

26 வைகாசி 2024 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 12448
வீதி விபத்தில் சிக்கி 30 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். Évreux (Eure) நகரில் கடமையாற்றும் வீரர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரின் Boulevard de Normandie பகுதியில் மிதிவண்டியில் பயணித்த குறித்த வீரர், கனரக வாகனம் ஒன்றுக்குள் சிக்குண்டுள்ளார்.
தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டு, அன்று இரவு விடுதலை செய்யப்பட்டார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1