■ Coupe de France : வெற்றிவாகை சூடியது PSG..!
26 வைகாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 8576
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற Coupe de France இறுதிப்போட்டியில், OL அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது PSG அணி.

2-1 எனும் கோல் கணக்கில் இந்த வெற்றி பதிவானது. PSG கழகம் 15 ஆவது முறையாக 'Coupe de France' கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது. இறுதியாக 2021 ஆம் ஆண்டில் 14 ஆவது கிண்ணத்தை சுவீகரித்திருந்தது.
PSG கழகம் சார்பாக O. Dembélé (22' ஆவது நிமிடத்தில்) ஒரு கோலும், F. Ruiz (34' ஆவது நிமிடத்தில்) ஒரு கோலும் அடித்தனர். லியோன் அணி சர்பாக J. O'Brien (55' ஆவது நிமிடத்தில்) ஒரு கோல் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த போட்டி Lille நகரில் உள்ள Stade Pierre-Mauroy அரங்கில் இடம்பெற்றது. பலத்த பாதுகாப்பு குவிக்கப்பட்டிருந்தது.
PSG கழகத்துக்காக தனது இறுதி நாட்களை விளையாடிக்கொண்டிருக்கும் Kylian Mbappé எவ்வித கோல்களையும் அடிக்காமல் விட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan