தடையுத்தரவு விதிக்கப்பட்ட இடத்தில் இன்று நினைவேந்தல்
18 வைகாசி 2024 சனி 11:25 | பார்வைகள் : 5591
தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
பெரிய நீலாவணை பொலிஸாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்திருந்நது.
அத் தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் காரைதீவு வினாயகம் விமலநாதன் ஆகியோர்
நகர்த்தல் மனுவை சட்டத்தரணிகளூடாக சமர்ப்பித்தன் பேரில் நீதிமன்றம் அத் தடையுத்தரவு நேற்று வெள்ளிக்கிழமை விலக்கி கொள்ளப்பட்டது.
அதன் பயனாக பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் முன்றளில் இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைப்பாளர் துஷாந்தன் ஏற்பாட்டில் சுடரேற்றி கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதான பிரமுகராக கலந்து கருத்துரைத்தார்.
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான க.சிவலிங்கம் பொ.செல்வநாயகம் திருமதி சுமித்ரா சமூக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan