Corbeil-Essonnes : காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய சாரதி மரத்தில் மோதி படுகாயம்!

17 வைகாசி 2024 வெள்ளி 17:37 | பார்வைகள் : 9266
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த சாரதி ஒருவர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
Corbeil-Essonnes (Essonne) நகரில் இச்சம்பவம் நேற்று மே 16 வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றது. 34 வயதுடைய சாரதி ஒருவர் RN7 சாலையில், மகிழுந்தில் அதிவேகமாக பயணித்துள்ளார். வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குறித்த மகிழுந்தை தடுத்து நிறுத்த முற்பட்டார்.
ஆனால் மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து பயணித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற காவல்துறையினரை மோதி தள்ளிவிட்டு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி மகிழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் மகிழுந்து சாரதில் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1