Paristamil Navigation Paristamil advert login

வட கொாியாவில்  சிவப்பு உதட்டுச்சாயத்திற்கு தடை

வட கொாியாவில்  சிவப்பு உதட்டுச்சாயத்திற்கு தடை

14 வைகாசி 2024 செவ்வாய் 09:38 | பார்வைகள் : 9676


வட கொாியாவில் பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரபலமான அலங்கார பொருட்களுக்கு ஏற்கனவே ஜனாதிபதி  தடை விதித்தார். தற்போது சிவப்பு நிற உதட்டு சாயத்திற்கும் தடை விதித்ததோடு இந்த தடையை மீறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

சிவப்பு வண்ணம் கம்யூனிசத்தின் ஆஸ்தான நிறமாக பார்க்கப்பட்டாலும் பெண்கள் பூசிக்கொள்ளும் உதட்டு சாயத்தை முதலாளித்துவத்தின் சின்னமாக வடகொரியா ஜனாதிபதி பார்ப்பதாக கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்