விஜய்சேதுபதி படம் அமெரிக்க திரைப்பட விழாவில்
11 வைகாசி 2024 சனி 09:49 | பார்வைகள் : 9099
'சர்வதே இந்திய திரைப்பட விழா' இந்த ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸில் வருகிற ஜூன் 27ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் வங்கதேசம், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படம் இடம் பெற்றுள்ளது.
இதில் இந்தியா, கனடா, அமெரிக்காவின் பங்களிப்பில் உருவாகியுள்ள 'டீயர் ஜெசி' என்ற படம் முதல் நாள் நிகழ்வில் திரையிடப்பட உள்ளது. இறுதி நாளில் 'மகாராஜா' திரையிடப்பட உள்ளது.
'மகாராஜா' படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் 50வது படம் இது. அனுராக் காஷ்யப் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் நடராஜன் சுப்ரமணியம், அபிராமி, முனிஷ்காந்த், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோ சார்பில் கீழ் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் தயாரித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan