ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல்
9 வைகாசி 2024 வியாழன் 15:20 | பார்வைகள் : 5682
இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடியின் பொய் பிரசாரங்களில் கவனம் சிதறாமல் உறுதியாக இருங்கள்.
பிரதமர் பதவி தன் கையை விட்டுப்போகிறது என்ற பயத்தில் மோடி இருக்கிறார். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் ஆட்சேர்ப்புப் பணிகளைத் துவங்குவோம். பணமதிப்பிழப்பு, தவறான வரி நடைமுறைகளை பிரதமர் மோடி புகுத்தினார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியது பொய்யானது. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், வெறுக்காதீர்கள், ஒரு வேலையைத் தேர்ந்தெடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan