மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் அமிதாப்பச்சன்?
8 சித்திரை 2024 திங்கள் 04:24 | பார்வைகள் : 6893
நடிகர் அமிதாப்பச்சன் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவர் மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் பிரபல ஹீரோவுக்கு தாத்தா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பல ஆண்டுகளாக ஹிந்தி திரையுலகில் மட்டுமே நடித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்மரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்திருந்த அமிதாப்பச்சன் பிரபாஸ், கமல்ஹாசன் நடித்து வரும் ’கல்கி 2898 ஏடி’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன், தற்போது ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அதாவது ராம்சரண் தேஜாவின் தாத்தா கரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .
ஏற்கனவே இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் தற்போது அமிதாப்பச்சன் இணைந்துள்ளதை அடுத்த இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. புஜ்ஜிபாபு இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிவராஜ் குமார் ஆகியவர்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan