இலங்கையில் முதன்முறையாக பிரசவ அறையில் தந்தைமார்களுக்கு அனுமதி

7 சித்திரை 2024 ஞாயிறு 13:53 | பார்வைகள் : 7440
இலங்கையில் முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தைமார்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு - காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால் குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறந்த மனநிலையுடன் பெண்கள் குழந்தைகளை பிரசவிக்கின்றமை விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1