அஜித் பட நடிகையால் பரபரப்பு..!
7 சித்திரை 2024 ஞாயிறு 07:48 | பார்வைகள் : 9482
அஜித் படத்தில் நடித்த நடிகை காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் ஒரு பக்கம் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கம் திடீரென ரசிகர்கள் குவிந்து அந்த நடிகை உடன் செல்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அஜித் நடித்த ’துணிவு’ தனுஷ் நடித்த ’அசுரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தல் நேரம் என்பதால் பிரபலங்களின் கார்களை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்புக்காக திருச்சிக்கு காரில் வந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த பறக்கும்படை அதிகாரிகள் அவரை முழுவதும் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் மஞ்சு வாரியர் கார் இருப்பதை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் உடனே அவருடன் செல்பி எடுக்க குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சோதனையை முடித்த பறக்கும்படி அதிகாரிகள் அவரது காரில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் அவரை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர்.
ஒரு பக்கம் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்த போது இன்னொரு பக்கம் மஞ்சு வாரியருடன் ரசிகர்கள் செல்பி எடுக்க குவிந்ததால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan