Paristamil Navigation Paristamil advert login

ஆஸ்திரேலியாவில் கனமழை - விமானங்கள் ரத்து

 ஆஸ்திரேலியாவில் கனமழை - விமானங்கள் ரத்து

6 சித்திரை 2024 சனி 10:47 | பார்வைகள் : 8070


ஆஸ்திரேலியாவில் சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறமையால் சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 

மேலும்  ரெட்பெர்ன் தொடருந்து நிலையத்தில் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன.

எனவே அங்கு தொடருந்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் தொடருந்து மற்றும் விமான பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்