உலகை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்.... ஆய்வு தகவல்

6 சித்திரை 2024 சனி 08:28 | பார்வைகள் : 8233
தற்பொழுது பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவிக்கையில்,
H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும் அவர் கூறினார்.
மேலும், இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல என்றும், இது ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ளதாகவும் டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவித்தார்.
இதனை எதிர்கொள்ள உடனடியாக தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, கனடாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஜான் ஃபௌல்டனும் பறவைக் காய்ச்சல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறக்கூடும் என்றும், இது கொவிட் 19 ஐ விட 100 மடங்கு ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1