Paristamil Navigation Paristamil advert login

ஈரானில்  ஆயுதக்குழுவின் தாக்குதல் - 10 ஈரானியப் படையினர் பலி

ஈரானில்  ஆயுதக்குழுவின் தாக்குதல் - 10 ஈரானியப் படையினர் பலி

5 சித்திரை 2024 வெள்ளி 09:28 | பார்வைகள் : 6135


ஈரானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஈரானிய அரச படையினர் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரச தொலைக்காட்சி நேற்று தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில்  இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர். 

18 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் என ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்தது.

ஜெய்ஷ் அல் அத்ல் எனும் இயக்கம் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. 

ஈரான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இந்த இயக்கத்தை பயங்கரவாத குழுவாக பிரகடனப்படுத்தியுள்ளன. 

கடந்த டிசெம்பர் மாதம் 11 ஈரானிய படையினர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கும்  ஜெய்ஷ் அல் அத்ல் உரிமை கோரியிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்