தைவான் நிலநடுக்கத்தில் தப்பித்த 101 மாடி கட்டிடம்....!
5 சித்திரை 2024 வெள்ளி 09:11 | பார்வைகள் : 7686
தைவான் தலைநகர் தைபேயில் 101 மாடிகளைக் கொண்ட கட்டிடம் நவீன பொறியியலின் ஆற்றலைப் பறைசாற்றுகிறது.
உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இந்த Taipei 101 கட்டிடம், தைவானில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியதற்காக தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது.
அதன் தீவிரத்தால் பல நகரங்களில் உள்ள பாரிய கட்டிடங்களின் அஸ்திவாரங்கள் குலுங்கின.
ஆனால் தைபே 101 மாடி கட்டிடத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
புதுமையான பொறியியல் கட்டுமானம் இந்த கட்டிடத்தை பூகம்பத்திலிருந்து தப்பிக்க வைத்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
87-92 மாடிகளுக்கு இடையில் tune செய்யப்பட்ட mass damper எனப்படும் 730-டன் எடைகொண்ட ஒரு பாரிய எஃகு கோளம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த எஃகு கோளம் பூகம்பத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகளின் விளைவை நடுநிலையாக்கும் என கூறப்படுகிறது.
இது கட்டிடத்தின் அசைவை 40 சதவீதம் வரை குறைத்து , அதன் குடியிருப்பாளர்களால் உணரப்படும் பதற்றத்தை குறைக்கும் என்று பொறியாளர்கள் கூறுகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan