Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

5 சித்திரை 2024 வெள்ளி 07:11 | பார்வைகள் : 10691


வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தைவான் நாட்டில்  ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்த நிலையில், 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதை தொடர்ந்து இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்